Sunday, 26 July 2020

உலகத்தை ஜெயிக்கும்

கர்த்தருடைய கண்கள்

கர்த்தருடைய நாமம்

சொல்

ஜெபம்ண்ணுங்கள்

இரட்சிக்கப்படுவாய்

தேவையானது ஒன்று

கண் சரீரத்தின் விளக்கு

நமது அக்கிரமத்தை மன்னித்தார்

உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது

கொஞ்சத்தில் உண்மை!

தேவ ஆவி கண்டறிவது எப்படி?

Monday, 13 July 2020

பயப்படாதிருங்கள்



தேவனின் வார்த்தை

பயப்படாதிருங்கள்


கிறுஸ்துவுக்குள் பிரியமானவர்களே,


 இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பட்ட நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும  அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாளிலும் கூட தேவனுடையை வார்த்தையை தியானிக்க கொடுத்த மேலான கிருபைக்காக தேவனை துதிக்கிறேன்.தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.

      

 'பயப்டாதிருங்கள்'  என்ற வார்தையின் அடிப்படையில்,வேதத்தில் உள்ள  சம்பவங்களின் பின்னணியில் தேவன் நமக்கு சொல்லும் செய்தியை தியானிக்க போகிறோம். இந்த சம்பவம் ஆதியாகமம் 14 வது அதிகாரத்தை முழுவதும் வாசிக்கும் போது தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

        ஆபிராம் தன்னுடைய சகோதரன் மகன்  லோத்துவுக்கு ஏற்பட்ட தீமையின் நிமித்தமான போராட்டத்தில் தேவன் ஆபிராமோடே இருந்து  லோத்துவையும் அவனுடைய பொருள்களையும் திரும்ப கொண்டு வரப்பண்ணி ஆபிராமே நீ பயப்டாதே எந்த சூழ்நிலையிலும் நீ இருந்தாலும் நான் உனக்கு கேடகமாக இருக்கிறேன் என்றும்,நான் உனக்கு பலனாய் இருக்கிறேன் என்று  ஆசீர்வாதத்தை தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்தார் என்று ஆதியாகமம்15:1ல் வாசிக்கிறோம்.

இந்தக் காரியங்கள் நடந்தபின்புகர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். (ஆதியாகமம் 15:1)

நாமும் கூட இந்நாட்களில் கலக்கங்கள், போரட்டங்கள், நெருக்கங்கள், கண்ணீர்கள், பாடுகள், வேதனைகள், துன்பங்கள், துயரங்கள், வியாதிகள், தனிமைகள், மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஏன் நாளையதினம் நமக்கு விடியுமா என்ற நிலையுலும் இருக்கலாம். இன்றும்  இயேசு கிறுஸ்து நம்மையும் பார்த்து சொல்லுகிறார் பயப்படாதிருங்கள். நான் உங்களுக்கு கேடகமாக இருக்கிறேன். நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம் அப்படி  என்ன செய்தார் ஆபிராம்? ஆபிராகமுக்கு  தேவன் எப்படி? இப்படிபட்ட ஆசீர்வாத்தை கொடுக்க முடிந்தது.அதற்கு அப்படி என்னதான் செய்தார் என்ற யோசிப்போம்..

   கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. (ஆதியாகமம் 12:1)

     அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். (ஆதியாகமம் 22:2)

மேலே வாசித்த இரண்டு சம்பவங்கள்  ஆபிரகாமின் வாழ்க்கையிலே மிகவும் முக்கியமான சம்பவங்கள். ஒருவேளை இதே போல தேவன் நம்மிடத்தில் கேட்டிருந்தால் கீழ்படிந்திருப்போமா? அநேக நேரங்களில் கண்ணுக்கு தெரிந்த மனிதர்கலேயே நம்ப மறுக்கிறோம். இப்படிபட்ட சந்தேகம் மற்ற கீழ்படிதல் இருக்கிறதா? சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இப்படி தேவன் ஆபிரகாமுக்கு சொன்ன எல்லவாற்றையும் கேள்வி கேட்கமால் கீழ்படிந்தார். அதுமட்டுமல்ல அவர் தேவனை தன்னுடைய உண்மையான தேவன் என்றும், அவரேயே நம்பி எதையும் செய்ய தயாராக இருந்தார், அவரை தன் உள்ளத்தில் ஆழத்தில் பற்றுதலுடன் வைத்திருந்தார்,அதனால் தான் அவர் அவ்வாறு கீழ்படிய முடிந்தது,ஆசீர்வத்தை சுதந்தரித்துக் கொள்ள முடிந்தது.அது மட்டுமில்லாமல் ஆபிராம் தேவனுக்கு பயந்து தீமையை விட்டு விலகினார் என்றும் வேதத்தில் பல இடங்களில் வாசிக்கலாம்.எனவே தான் தேவன் ஆபிராமோடே இருந்தார். 

 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.(நீதிமொழிகள் 28:13)

  நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1யோவான் 1:9)

 தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்;  (நீதிமொழிகள் 8:13)


ஆம் அன்புக்கூரியவர்களே நாமும் தீமையை வீட்டு விலகி, நம்முடைய பாவங்களின் நிமித்தம் நம் உள்ளத்தில் மரித்த  இயேசு கிறுஸ்துவை, நம்முடைய   பாவத்தை அறிக்கை செய்து,  மனம்திருந்தி அவரையே சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் பொழுது, அடக்கம் செய்யப்பட்ட கல்லரையில் அல்ல உயிருள்ள உங்கள் இயேசு கிறுஸ்து  நம்முடைய உள்ளத்திலே உயிர்தெழுவார். நாமும்,இப்படப்பட்ட அனுபவத்தையும் பெற்றுக்கொண்டால், ஆசீர்வதத்தை பெற்றுக்கொள்ளுவோம் என்பது அதிக நிச்சயம்.ஆமேன்.

                                                                                                        கிறுஸ்துவின் பணியில்
                                                                                                           டேவிட சாமுவேல்ராஜா...


Friday, 10 July 2020

ஆவியிலே விழித்திருங்கள்


தேவனின் வார்த்தை
விழித்திருங்கள்

  இயேசு கிறுஸ்துவின் விலையேறப்பட்ட நாமத்திலும் கிருபையிலும் உங்கள்அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய தேவ வார்த்தையாக நாம் பார்க்க இருக்கும் வசனம்…

  நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பெலவீனமுள்ளது என்றார்” (மத்தேயு 26:41)

           சோதனை  யாருக்கும் வராதுமுமல்ல அதை கடக்க முடியாதுமுமல்ல. பூமியில் உள்ள  எவ்வளவு பெரிய பரிசுத்தவானாக இருந்தாலும், சோதனை இல்லாமல் இருக்கமுடியாது. இந்த உலகில் எந்த பரிசுத்தவானாகிலும் நான் சோதனையைக் கடந்துவரவில்லை என்று சொல்லக்கூடுமா? சரியாக சொல்லக்கூடுமானால், அவர்களே அதிகமான சோதனையின் ஊடாக கடந்து சென்றவர்கள். ஆனால் ஆவியிலே விழித்திருந்தவர்களே அதை கடந்து சென்றவர்கள் என்பதை வேதாகமத்திலே பவுல், தானியேல்,யோசேப்பு இன்னும் அநேகரைக் குறித்து நாம் வாசிக்க முடியும். இன்னும் அநேகர்  ஆவியிலே விழித்திராதவர்கள் சோதனையை அவர்களது  சொந்த மாம்சத்தினாலே மேற்க்கொள்ள முடியாமல் இருந்வர்களும் உண்டு எடுத்துக்காட்டாக சீம்சோன்,ஆதாம்,ஏவாள்,

         அப்போஸ்தலராகிய பவுல் ரோமபுரியிலுள்ள மக்களுக்கு எழுதியதாவது  அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.( ரோமர் 12:11)

          நமது மாம்சம் பெலவீனமுள்ளது. சோதனையை மேற்கொள்ள நமது மாம்சத்தின் பெலன் உதவாது. மேலும் பவுல், “என் மாம்சத்தில் நன்மை வாசமாயிருக்கிறதில்லை என்று நான் அறிந்திருக்கிறேன்” (ரோமர் 7:18) என்று சொல்லுகிறார். உன்னுடைய சொந்த ஞானத்தால், உன்னுடைய சொந்த பெலத்தால் ஒருபோதும் சோதனையை மேற்கொள்ளமுடியாது. என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது.

       ஒரு சம்பவத்தின் அடிப்படையில் ஆவிலே அனலாய் இருப்பதை நாம் தியானிக்கும் போது நமக்கு தெளிவாய் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.அந்த சம்பவம் மாற்கு எழுதிய சுவிசேஷம் 5 ஆம் அதிகாரம் வசனங்கள் 25 முதல் 34 ஆம் வசனங்கள் வரை நாம் வாசிக்க முடியும்.பன்னிரண்டு வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இயேசுவைக்  குறித்துக் கேள்விப்பட்டு  நான் அவருடைய வஸ்த்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று ஆவியிலே விழித்திருந்து, அந்த ஜனக்கூட்டத்தின் மத்தியிலும் அவருக்கு பின்னாக வந்து வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு, அவரிடம் இருந்து வல்லமை புறப்பட்டு வந்து அதினாலே  சுகம் பெற்றாள் என்று வாசிக்கிறோம்.

   இதை இயேசு தன்னிடத்தில் இருந்து வல்லமை புறப்பட்டு போனதை ஆவியிலே உணர்ந்து  ”என் வஸ்திரத்தை தொட்டது யார்? என்று கேட்கிறார். அதற்கு அவருடன் கூடவே சுற்றித்திரிந்து பல அற்புதங்களை பார்த்தவர்கலுமாகிய அவருடைய சீஷர்கள் ஆவியிலே விழித்திராதவர்களாய் இல்லாமல் அவரை நோக்கி:  திராளன ஜனங்கள்  உம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும் இப்படி கேட்கிறீரே என்றார்கள்.அவர் எதற்காக இப்படி கேட்கிறார் என்று ஆவியிலே உணராதவர்களாய் இப்படி கேற்கிறார்கள் இந்த நிகழ்ச்சியை நான் சிஷர்களுக்கு கொடுக்கபட்ட பரிட்சையாகவே பார்க்கிறேன்,ஒருவேளை அவர்கள் அவர் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளை ஆவியிலே புரிந்து கொள்ள முடியாதவர்களாய் அப்படி கேட்கிறார்கள்.

 கிறுஸ்துவுக்குள் அன்புக்குரியவர்களே நாமும் அவருடைய சீஷர்களைப் போல இருக்கிறோமா? அல்லது ஆவியிலே அனலாய் இருக்கிறவர்களாய் இருக்கிறோமா?.ஒரு வேளை அனுதினமும் தேவன் சமுகத்திலே இருக்கிறவர்களாய் இருக்கலாம்,தினமும் வேதம் வாசிக்கலாம், பல நற்கிரியைகளை செய்யலாம்,இருந்த போதிலும் ஆவியிலே விழித்திருக்கவில்லை என்றால் நீங்களும் சோதனைகளை கடந்து சொல்ல முடியாது. இயேசுவைக் குறித்து கேள்விபட்டு எப்படி விசுவாசம் என்னும் ஆவியிலே விழித்திருந்து அந்த  ஸ்தீரி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டாலோ அதே போல நாமும் விசுவாசம் என்னும் ஆவியிலே அனலாய் இருக்க அழைக்கபட்டிருக்கிறோம்.
கர்த்தரிருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு (2 கொரிந்தியர் 3:17) 
தேவன் தாமே விழித்திருக்கும் ஆவியை நாம் அனைவருக்கும் தருவாராக ஆமேன்

கிறுஸ்துவின் பணியில்
டேவிட் சாமுவேல்ராஜா…

எகிப்தின் வியாதிகள் ஒன்றும் உனக்கு வரப்பண்ணேன்.


தேவனின் வார்த்தை

பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறுஸ்திவினாலும் உங்களுக்கு கிருபையும் சமதானமும் உண்டாவதாக. 
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.(யாத்திராகமம்15:26)   இந்த வசனத்தின் மூலம் பரிசுத்த ஆவியனாவர் தாம் உங்களோடு பேசுவாராக. ஆமேன்.

தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது:- 

1.கர்த்தரின் வார்த்தையை கவனாமாய் கேட்டல்
2.கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தல்
3.கர்த்தரின்  கட்டளைகளுக்கு செவி கொடுத்தல்
4. கர்தரின் நியமங்களை கைகொள்ளுதல்

 
”உங்கள் அவயவங்களை நீதியிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:13) 

தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது நம்முடைய அவயவங்களை தேவனுக்காக அர்ப்பணிக்கும் போது அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டு, அவர் கட்டளைகளுக்கு செவி கொடுத்து அவருடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்து, கர்த்தரின் நியமங்களை கைக்கொள்ளவும் பரிசுத்த ஆவியானவர் தாம் உங்களுக்கு பெலன் கொடுப்பார் அப்படி நாம் கேட்கும் போது இஸ்ரவேல் புத்திரர்களாகிறோம்..

 இஸ்ரவேல் புத்திரருக்கு  கிடைக்கும் பலன்:

1.எகிப்தியருக்கு வந்த வியாதிகள் உனக்கு வராது
2.நானே உன் பரிகாரி (மருத்துவர்).

எகிப்தியருக்கு வந்த கொடிய வாதைகள் எகிப்தியர்களை மட்டுமே வாதித்தது இஸ்ரவேல் (தேவனுடைய) புத்திரருக்கு எதுவும் செய்யவில்லை என்பதையும் நாம் வேதத்திலே வாசிக்கிறோம்.

அது போல, 2020 ஆம் ஆண்டில் நாமும் கொள்ளை நோய்யாகிய வாதை ஊடக பயணித்திக் கொண்டிருக்கிறோம். இந்த கொள்ளை நோய் இஸ்ரவேல் புத்திரருக்கு  ஒன்றும் வராது என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்துள்ளார்.
 தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற இந்த நான்கு காரியங்களாகிய கேட்டல், செய்தல், கொடுத்தல் மற்றும் கைகொள்ளுதல் ஆகியவற்றை நாம் நிறைவேற்றும் போது கர்த்தருடைய இந்த வாக்குத்தத்ததை சுதந்தரிதுக்கொள்வது அதிக நிச்சயம்.

தேவனுடைய சத்தத்தைக் கேட்ட முதல் மனிதன்:-
நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். (ஆதியாகமம்3:10)
தன் சாயலில் படைத்த ஆதாம் தேவனின் வார்த்தைக்கு செவிசாய்கததினால் சாபங்களை பெற்றுக்கொண்ட மாத்திரம் அல்ல தன்னுடைய சந்ததியினருக்கு சாபத்தை கடத்தி விட்டான் என்பதை நாம் வாசிக்கிறோம்.

ஆவிக்குறிய இஸ்ரவேலர்கள்:-

அதெப்படிய்யென்றால் மாம்சத்தின்படி  பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். (ரோமர்9:8)
இந்த வாக்குத்த்தம் இஸ்ரவேலருக்கு மட்டும் அல்ல (ரோமர்9:8) படி அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நடக்கிறவர்கள் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது.  .

எனவே கிறுஸ்துவில் அன்புக்குறியவர்களே நீங்கள் அவருடைய நியமங்கள்ளின்படி நடந்து வாதைகளிருந்து விலகி தேவனை மாத்திரமே துதித்து வாழ பழகவும். உங்களுக்கு மாத்திரம் அல்ல உங்களுடைய சந்ததியினருக்கும் வாக்குத்தத்ததின் பலனைப் பெற்றுக் கொள்ள பரிசுத்த ஆவியனவர் தாம் பெலன் தருவாராக ஆமேன்.

கிறுஸ்துவின் பணியில்
டேவிட் சாமுவேல் ராஜா

வசனம்