தேவனின் வார்த்தை
பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறுஸ்திவினாலும் உங்களுக்கு கிருபையும் சமதானமும் உண்டாவதாக.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.(யாத்திராகமம்15:26) இந்த வசனத்தின் மூலம் பரிசுத்த ஆவியனாவர் தாம் உங்களோடு பேசுவாராக. ஆமேன்.
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது:-
1.கர்த்தரின் வார்த்தையை கவனாமாய் கேட்டல்
2.கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தல்
3.கர்த்தரின் கட்டளைகளுக்கு செவி கொடுத்தல்
4. கர்தரின் நியமங்களை கைகொள்ளுதல்
”உங்கள் அவயவங்களை நீதியிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:13)
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது நம்முடைய அவயவங்களை தேவனுக்காக அர்ப்பணிக்கும் போது அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டு, அவர் கட்டளைகளுக்கு செவி கொடுத்து அவருடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்து, கர்த்தரின் நியமங்களை கைக்கொள்ளவும் பரிசுத்த ஆவியானவர் தாம் உங்களுக்கு பெலன் கொடுப்பார் அப்படி நாம் கேட்கும் போது இஸ்ரவேல் புத்திரர்களாகிறோம்..
இஸ்ரவேல் புத்திரருக்கு கிடைக்கும் பலன்:
1.எகிப்தியருக்கு வந்த வியாதிகள் உனக்கு வராது
2.நானே உன் பரிகாரி (மருத்துவர்).
எகிப்தியருக்கு வந்த கொடிய வாதைகள் எகிப்தியர்களை மட்டுமே வாதித்தது இஸ்ரவேல் (தேவனுடைய) புத்திரருக்கு எதுவும் செய்யவில்லை என்பதையும் நாம் வேதத்திலே வாசிக்கிறோம்.
அது போல, 2020 ஆம் ஆண்டில் நாமும் கொள்ளை நோய்யாகிய வாதை ஊடக பயணித்திக் கொண்டிருக்கிறோம். இந்த கொள்ளை நோய் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒன்றும் வராது என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்துள்ளார்.
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற இந்த நான்கு காரியங்களாகிய கேட்டல், செய்தல், கொடுத்தல் மற்றும் கைகொள்ளுதல் ஆகியவற்றை நாம் நிறைவேற்றும் போது கர்த்தருடைய இந்த வாக்குத்தத்ததை சுதந்தரிதுக்கொள்வது அதிக நிச்சயம்.
தேவனுடைய சத்தத்தைக் கேட்ட முதல் மனிதன்:-
நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். (ஆதியாகமம்3:10)
தன் சாயலில் படைத்த ஆதாம் தேவனின் வார்த்தைக்கு செவிசாய்கததினால் சாபங்களை பெற்றுக்கொண்ட மாத்திரம் அல்ல தன்னுடைய சந்ததியினருக்கு சாபத்தை கடத்தி விட்டான் என்பதை நாம் வாசிக்கிறோம்.
ஆவிக்குறிய இஸ்ரவேலர்கள்:-
அதெப்படிய்யென்றால் மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். (ரோமர்9:8)
இந்த வாக்குத்த்தம் இஸ்ரவேலருக்கு மட்டும் அல்ல (ரோமர்9:8) படி அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நடக்கிறவர்கள் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. .
எனவே கிறுஸ்துவில் அன்புக்குறியவர்களே நீங்கள் அவருடைய நியமங்கள்ளின்படி நடந்து வாதைகளிருந்து விலகி தேவனை மாத்திரமே துதித்து வாழ பழகவும். உங்களுக்கு மாத்திரம் அல்ல உங்களுடைய சந்ததியினருக்கும் வாக்குத்தத்ததின் பலனைப் பெற்றுக் கொள்ள பரிசுத்த ஆவியனவர் தாம் பெலன் தருவாராக ஆமேன்.
கிறுஸ்துவின் பணியில்
டேவிட் சாமுவேல் ராஜா
No comments:
Post a Comment