தேவனின் வார்த்தை
விழித்திருங்கள்
இயேசு கிறுஸ்துவின் விலையேறப்பட்ட நாமத்திலும் கிருபையிலும் உங்கள்அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய தேவ வார்த்தையாக நாம் பார்க்க இருக்கும் வசனம்…
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பெலவீனமுள்ளது என்றார்” (மத்தேயு 26:41)
சோதனை யாருக்கும் வராதுமுமல்ல அதை கடக்க முடியாதுமுமல்ல. பூமியில் உள்ள எவ்வளவு பெரிய பரிசுத்தவானாக இருந்தாலும், சோதனை இல்லாமல் இருக்கமுடியாது. இந்த உலகில் எந்த பரிசுத்தவானாகிலும் நான் சோதனையைக் கடந்துவரவில்லை என்று சொல்லக்கூடுமா? சரியாக சொல்லக்கூடுமானால், அவர்களே அதிகமான சோதனையின் ஊடாக கடந்து சென்றவர்கள். ஆனால் ஆவியிலே விழித்திருந்தவர்களே அதை கடந்து சென்றவர்கள் என்பதை வேதாகமத்திலே பவுல், தானியேல்,யோசேப்பு இன்னும் அநேகரைக் குறித்து நாம் வாசிக்க முடியும். இன்னும் அநேகர் ஆவியிலே விழித்திராதவர்கள் சோதனையை அவர்களது சொந்த மாம்சத்தினாலே மேற்க்கொள்ள முடியாமல் இருந்வர்களும் உண்டு எடுத்துக்காட்டாக சீம்சோன்,ஆதாம்,ஏவாள்,
அப்போஸ்தலராகிய பவுல் ரோமபுரியிலுள்ள மக்களுக்கு எழுதியதாவது அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.( ரோமர் 12:11)
நமது மாம்சம் பெலவீனமுள்ளது. சோதனையை மேற்கொள்ள நமது மாம்சத்தின் பெலன் உதவாது. மேலும் பவுல், “என் மாம்சத்தில் நன்மை வாசமாயிருக்கிறதில்லை என்று நான் அறிந்திருக்கிறேன்” (ரோமர் 7:18) என்று சொல்லுகிறார். உன்னுடைய சொந்த ஞானத்தால், உன்னுடைய சொந்த பெலத்தால் ஒருபோதும் சோதனையை மேற்கொள்ளமுடியாது. என்று வேதம் தெளிவாய் சொல்லுகிறது.
ஒரு சம்பவத்தின் அடிப்படையில் ஆவிலே அனலாய் இருப்பதை நாம் தியானிக்கும் போது நமக்கு தெளிவாய் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.அந்த சம்பவம் மாற்கு எழுதிய சுவிசேஷம் 5 ஆம் அதிகாரம் வசனங்கள் 25 முதல் 34 ஆம் வசனங்கள் வரை நாம் வாசிக்க முடியும்.பன்னிரண்டு வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு நான் அவருடைய வஸ்த்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று ஆவியிலே விழித்திருந்து, அந்த ஜனக்கூட்டத்தின் மத்தியிலும் அவருக்கு பின்னாக வந்து வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு, அவரிடம் இருந்து வல்லமை புறப்பட்டு வந்து அதினாலே சுகம் பெற்றாள் என்று வாசிக்கிறோம்.
இதை இயேசு தன்னிடத்தில் இருந்து வல்லமை புறப்பட்டு போனதை ஆவியிலே உணர்ந்து ”என் வஸ்திரத்தை தொட்டது யார்? என்று கேட்கிறார். அதற்கு அவருடன் கூடவே சுற்றித்திரிந்து பல அற்புதங்களை பார்த்தவர்கலுமாகிய அவருடைய சீஷர்கள் ஆவியிலே விழித்திராதவர்களாய் இல்லாமல் அவரை நோக்கி: திராளன ஜனங்கள் உம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும் இப்படி கேட்கிறீரே என்றார்கள்.அவர் எதற்காக இப்படி கேட்கிறார் என்று ஆவியிலே உணராதவர்களாய் இப்படி கேற்கிறார்கள் இந்த நிகழ்ச்சியை நான் சிஷர்களுக்கு கொடுக்கபட்ட பரிட்சையாகவே பார்க்கிறேன்,ஒருவேளை அவர்கள் அவர் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளை ஆவியிலே புரிந்து கொள்ள முடியாதவர்களாய் அப்படி கேட்கிறார்கள்.
கிறுஸ்துவுக்குள் அன்புக்குரியவர்களே நாமும் அவருடைய சீஷர்களைப் போல இருக்கிறோமா? அல்லது ஆவியிலே அனலாய் இருக்கிறவர்களாய் இருக்கிறோமா?.ஒரு வேளை அனுதினமும் தேவன் சமுகத்திலே இருக்கிறவர்களாய் இருக்கலாம்,தினமும் வேதம் வாசிக்கலாம், பல நற்கிரியைகளை செய்யலாம்,இருந்த போதிலும் ஆவியிலே விழித்திருக்கவில்லை என்றால் நீங்களும் சோதனைகளை கடந்து சொல்ல முடியாது. இயேசுவைக் குறித்து கேள்விபட்டு எப்படி விசுவாசம் என்னும் ஆவியிலே விழித்திருந்து அந்த ஸ்தீரி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டாலோ அதே போல நாமும் விசுவாசம் என்னும் ஆவியிலே அனலாய் இருக்க அழைக்கபட்டிருக்கிறோம்.
கர்த்தரிருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு (2 கொரிந்தியர் 3:17)
தேவன் தாமே விழித்திருக்கும் ஆவியை நாம் அனைவருக்கும் தருவாராக ஆமேன்
கிறுஸ்துவின் பணியில்
டேவிட் சாமுவேல்ராஜா…
No comments:
Post a Comment