Sunday, 9 August 2020

பிறவிக்குருடன்




#பிறவி குருடன்#

விழி இரண்டும் இன்றி
வழியருகே அமர்ந்து 
வாழ்க்கை நடத்தி
வந்த பிறவிகுருடன்..

இருளில் வாழ்வது
இவன் செய்த பாவமா..
இவன் பெற்றோர்
செய்த பாவமா...

வேடிக்கையாய் கேள்வி
ஒன்று  வேண்டுமேன்றே
சிடர்கள் கேட்க...

இவன்  பாவமுமல்ல
இவன் பெற்றோர்
செய்த பாவமல்ல..

தேவ ஒளி இவனில்
உதிக்கவே இவன் 
இருளில் பிறந்தான்
நானே அந்த ஒளி
என்று சொல்லி...

உமிழ்நீரில் மண்
குலைத்து 
உத்தமர் இயேசு
அவன் 
கண்ணில் பூசி..

குளத்தில்  கழுவு
சடுதியில்
விழி திறக்கும்
என்ற 
சேதியை காதில்
சொல்லி 
சட்டென்று கடந்து
சென்றார்...

அண்டை வீட்டாரும்
அயலாரும் இவன்
அவன் தானே
என்று கேட்க..

நான் தான் அவன்
நடந்ததை சாட்சியாய்
சொல்ல...

பதரிப்போய் அவனை
பரிசேயனிடம் கூட்டி
போக..

ஆயிரம் தடவைக்
கேட்டாலும் அதே
சாட்சி...

பரிசேயன் செய்வது
அறியாமல் அவனை
பார்த்து பாவத்தில்
பிறந்த நீயா 
பாடம் எடுப்பது
பரியாசம் பண்ணி
புறப்பே தள்ளி
புண்ணியம் சேர்த்தனர்..

என்னில் சேர்ந்தவனை
எவன் புறம்பே  தள்ளுவது
இறைவமகன் இயேசு
அன்போடு அனைத்து
ஆதரவு தந்தார்..

உற்றாரும் உறவினரும்
உன்னை புறம்பே
தள்ளினரோ..

மற்ற மனிதர்களும்
வசை மாறி
பொழிந்தனரோ...

கடந்த வாழ்க்கையை
கை நீட்டி 
காட்டினரோ...

இருளின் வாழ்விதனில்
தடம் மாறி தவிக்கிறாயோ...

கவலையும் வேண்டாம்
கண்ணீரும் வேண்டாம்..

ஒளியின் தேவனாம்
உன்னத இயேசுவாம்
உந்தன் வாழ்வில்
ஒளியை தந்திடுவார்...

கிறுஸ்துவின் பணியில்
டேவிட் சாமுவேல் ராஜா

No comments:

Post a Comment

வசனம்