நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு,இவைகளின் படி செய்கிறவன் எவனோ,அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுசனுக்கு ஒப்பிடுவேன். மத்தேயு 7: 25
Tuesday, 18 August 2020
Friday, 14 August 2020
Wednesday, 12 August 2020
Sunday, 9 August 2020
சகேயு
#சகேயு#
அதிகாரத்தில் தலைவன்
ஆஸ்தியில் செல்வன்
உள்ளத்தில் பாவி
உருவத்தில் குள்ளன்...
ஊரார் சொன்னதை
காதில் கேட்டு
இன்னார் இயேசு
என்று தன்
கண்ணால் காண...
வித விதமாய்
வகை தேடி
வாய்க்காமல் போகவே...
ஆனாலும் விடவில்லை
தான் கொண்ட
ஆசை தனை...
அத்தி
மர கிளையினிலே
அமர்ந்து கொண்டு
அவருக்காய் காத்திருந்தான்
அவரையே கண்
நோக்கி பார்த்திருந்தான்...
அத்தி மரத்தடியில் நின்று அண்ணார்ந்து பார்த்து
கொண்டு ஆசையாய்
அழைத்திடவே அவசரமாய்
இறங்கி வந்தான்
அன்போடு அழைத்து
சென்று தன்
வீட்டில் தங்கிடவே...
பார்த்தாயா பார்த்தாயா
பாவியோடு பந்தி
சேர பரபரப்பாய்
போனார் என்று
அக்கம் பக்கம்
முணுமுணுக்க...
அந்தஸ்தயையும்
ஆஸ்தியையும்
அவருக்காய் தூக்கி
போட்டு...
அநியாயமாய் வாங்கியதை அப்பொழுதே திருப்பி
தந்து அவர்
பாதம் வந்து
நிக்க...
இன்றைக்கே உன்
வீட்டில் இரட்சிப்பு
வந்தது என்று
விசுவாசிகளின்
பட்டியலில் இவனும்
ஒருவன் என்றார்..
உலகத்தையே உன்
வசம் ஆக்கி
உன் ஜீவனை
இழந்து வீட்டு
இருளிலே வாழ்வோரேல்லாம்...
இறைமகன் இயேசுவை
தன் வீட்டில் கூட்டி
சேர்த்தால் இழந்ததை
திரும்பப் பெருவாய்
இரட்சிப்பின் பாத்திரமாய்..
லூக்கா19:1 -10
கிறுஸ்துவின் பணியில்
டேவிட் சாமுவேல் ராஜா..
பிறவிக்குருடன்
#பிறவி குருடன்#
விழி இரண்டும் இன்றி
வழியருகே அமர்ந்து
வாழ்க்கை நடத்தி
வந்த பிறவிகுருடன்..
இருளில் வாழ்வது
இவன் செய்த பாவமா..
இவன் பெற்றோர்
செய்த பாவமா...
வேடிக்கையாய் கேள்வி
ஒன்று வேண்டுமேன்றே
சிடர்கள் கேட்க...
இவன் பாவமுமல்ல
இவன் பெற்றோர்
செய்த பாவமல்ல..
தேவ ஒளி இவனில்
உதிக்கவே இவன்
இருளில் பிறந்தான்
நானே அந்த ஒளி
என்று சொல்லி...
உமிழ்நீரில் மண்
குலைத்து
உத்தமர் இயேசு
அவன்
கண்ணில் பூசி..
குளத்தில் கழுவு
சடுதியில்
விழி திறக்கும்
என்ற
சேதியை காதில்
சொல்லி
சட்டென்று கடந்து
சென்றார்...
அண்டை வீட்டாரும்
அயலாரும் இவன்
அவன் தானே
என்று கேட்க..
நான் தான் அவன்
நடந்ததை சாட்சியாய்
சொல்ல...
பதரிப்போய் அவனை
பரிசேயனிடம் கூட்டி
போக..
ஆயிரம் தடவைக்
கேட்டாலும் அதே
சாட்சி...
பரிசேயன் செய்வது
அறியாமல் அவனை
பார்த்து பாவத்தில்
பிறந்த நீயா
பாடம் எடுப்பது
பரியாசம் பண்ணி
புறப்பே தள்ளி
புண்ணியம் சேர்த்தனர்..
என்னில் சேர்ந்தவனை
எவன் புறம்பே தள்ளுவது
இறைவமகன் இயேசு
அன்போடு அனைத்து
ஆதரவு தந்தார்..
உற்றாரும் உறவினரும்
உன்னை புறம்பே
தள்ளினரோ..
மற்ற மனிதர்களும்
வசை மாறி
பொழிந்தனரோ...
கடந்த வாழ்க்கையை
கை நீட்டி
காட்டினரோ...
இருளின் வாழ்விதனில்
தடம் மாறி தவிக்கிறாயோ...
கவலையும் வேண்டாம்
கண்ணீரும் வேண்டாம்..
ஒளியின் தேவனாம்
உன்னத இயேசுவாம்
உந்தன் வாழ்வில்
ஒளியை தந்திடுவார்...
கிறுஸ்துவின் பணியில்
டேவிட் சாமுவேல் ராஜா
Saturday, 8 August 2020
Sunday, 2 August 2020
Subscribe to:
Comments (Atom)
-
*தேவனுடைய வழிகள்* ==================== *"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல. உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர...
-
முதலாவது பொதுவான, வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக் குறித்துப் பார்ப்போம். 2பேதுரு 3:9ல் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல...
-
நம் அனைவருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு வசனம். ஆனால் பலருக்கு வரும் கேள்வி, வசனம் இப்படி சொல்லியிருக்க, நான் கேட்கிறது மட்டும் தேவ...